×

“நாளை எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது”: தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் எச்சரிக்கை

சென்னை: நாளை எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் நாகராஜ முருகன் கண்டிப்பாக தெரிவித்திருக்கிறார். பொதுவாக கல்வித்துறை பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகள், அறிவுறுத்தல்களை அனைத்து தனியார் பள்ளிகளும் முறையாக பின்பற்றுவது கிடையாது. முன்னணி தனியார் பள்ளிகள், கல்வித்துறை உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்துவது, விதிகளை கடைபிடிக்காதது போன்ற செயல்களை நீண்ட காலமாக நடத்தி வருகின்றன.

இதனிடையே, அரசு விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிற மாவட்டங்களிலும் சனிக்கிழமை விடுமுறை என்றாலும் கூட அந்த நாளில் பள்ளிகளை நடத்துவது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக கல்வித்துறைக்கு வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் நாகராஜ முருகன், கல்வித்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் 100 சதவீதம் பின்பற்ற வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலை நாள் கிடையாது. 4 மாவட்டங்களிலும் நாளை தனியார் பள்ளிகளையும் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாளை எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது.

11ம் தேதி தான் பள்ளிகளை திறக்க வேண்டும். அதுவரை பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்தால் மட்டுமே பள்ளிகளை நடத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post “நாளை எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது”: தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : private schools ,Chennai ,Director of ,Private ,Schools ,Nagaraja Murugan ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு...